என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் அடித்து கொலை"
வேலூர்:
காட்பாடி அடுத்த கரசமங்கலம் சிங்கா ரெட்டியூரில் சிலர் இன்று காலை கானாறு வழியாக நடந்து சென்றனர். அப்போது கானாறு பள்ளத்தில் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
மேலும் அவரது ஒரு கையில் 5 விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என தெரியவில்லை.
இறந்தவர் சிகப்பு கலரில் டி-சர்ட்டும், சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோத தகராறில் கொலை செய்து இங்கு வீசி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது பேரூர்மதுராகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சேற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இது குறித்து அவர்கள் சோழத்தரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.
அதில் அந்த வாலிபரின் முதுகு மற்றும் உடலின் சில இடங்களில் காயங்கள் இருந்தன. அந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து வாலிபர் அணிந்திருந்த உடைகள் மற்றும் வேறு ஏதாவது பொருள் கிடக்கிறதா? என்று சம்பவ இடத்தை சுற்றிலும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தின் அருகே சட்டை மற்றும் கைலி ஒன்று கிடந்ததை பார்த்தனர். சட்டை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. கைலியின் அருகே கிடந்த ஒரு பேப்பரில் மொபைல் நம்பர் எழுதி இருந்தது.
ஆனால் அதில் கடைசி 2 இலக்க நம்பர் இல்லை. இதனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேச முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நம்பரை தொலை தொடர்பு நிறுவனத்திடம் கொடுத்து ஏதாவது விவரம் கிடைக்குமா என்று போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.
வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சம்பவ இடத்தை சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வாலிபரை மர்ம மனிதர்கள் அடித்து கொலை செய்து உடலை சேற்றில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை கொலை செய்தது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சந்தேகபடும்படியாக கிராமத்தில் யாராவது நடமாடினார்களா? என்று பொதுமக்களிடம் போலீசார் விசாரித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை பெல் அடுத்த நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் ரூபன் இவரது மகன் அருண்குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டைவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பொன்னாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள விவசாய கிணற்றின் அருகே இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் ரத்த காயங்கள் உள்ளன. மர்மநபர்கள் அவரை கொலை செய்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
ராணிப்பேட்டை டி.எஸ்.பி. கலைச்செல்வன், சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அருண்குமாருக்கு முன்விரோதிகள் உள்ளார்களா? எதற்காக கொலை செய்யப்பட்டார். என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வீட்டு வசதி வாரிய பகுதியையொட்டி ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அதன் அருகே புதரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் இது குறித்து பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று புதரில் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர்.
அந்த வாலிபர் பேண்டும், சட்டையும் அணிந்திருந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. போலீசார் அந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த டிரைவிங் லைசென்சை கைப்பற்றினர். அதில், தியாகு, வல்லம்படுகை என்று இருந்தது.
யாரோ மர்ம மனிதர்கள் அவரை கடத்தி சென்று அடித்து கொலை செய்து விட்டு பிணத்தை தண்டவாளம் அருகே வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிறார்கள். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டியில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மகேந்திரகுமார். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31). இவர், திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார். ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய அவர், திடீரென மாயமானார். இரவு முழுவதும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில், இன்று காலை திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுப்பற்றி அப்பகுதி மக்கள், கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை பார்வையிட்டபோது, ராஜ்குமார் கழுத்தில் வீக்கம் இருந்தது.
எனவே, அவர் கழுத்து நெரிக்கப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, பிணத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜ்குமார், கவுதம பேட்டையை சேர்ந்த வாலிபர்கள் சிலருடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஏற்பட்ட தகராறில் அந்த வாலிபர்கள், ராஜ்குமாரை சரமாரியாக தாக்கி கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்